பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ராமநாதசுவாமி சிலை போட்டோ!

ஆலயங்கள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
rameshwaram - 2026

ராமேஸ்வரம் ‘ராமநாதசுவாமி மூலவருக்கு சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் தீட்சை பெற்ற கோயில் குருக்கள் மட்டுமே அபிேஷகம், பூஜை, தீபாராதனைகளை நடத்த முடியும். மற்றவர்கள் கருவறைக்குள் செல்ல அனுமதியில்லை.

கோயில் கருவறைக்குள் இடதுபக்கம் நின்று அலைபேசியில் எடுத்த ராமநாத சுவாமி மூலவர் படம் நேற்று வாட்ஸ் ஆப்பில் பரவியதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரவணன் இது குறித்துக் கூறுகையில், ”பணத்திற்கு ஆசைப்பட்டு சிலர் சுவாமி படத்தை அனுப்பியது கண்டனத்திற்குரியது.இது தொடர்பாக இந்து அறநிலைதுறை ஆணையர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.