அதே பாகிஸ்தான் ஏஜெண்ட்தனம்… தமிமுன் அன்சாரியின் தேசவிரோத நடத்தை!

Published:

thamimunansari - 2026

NO CAA, NO NRC என்று வெள்ளை வண்ணத்தில் வாசகங்கள் அச்சிட்டிருந்த கருப்பு டீசர்ட் அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்றார் தமிமுன் அன்சாரி!

எனவே இது போன்ற டீசர்ட்கள் அதிக அளவில் இசுலாமிய பிரிவினைவாத இயக்கங்களால் அச்சிடப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது போன்ற டீசர்ட் பிரசாரத்துக்கு இசுலாமிய பிரிவினைவாத இயக்கங்கள் பின்னணியில் வேலை செய்கின்றனவா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது தமிமுன் அன்சாரியின் செயல்!

தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத் தொடரில் அதிமுக.,வின் சார்பில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், NO CAA, NO NRC என்று, இச்லாமிய இயக்கங்கள் முன்னெடுத்துள்ள பிரசாரத்தை சட்டமன்றத்திலும் காட்டும் வகையில், அச்சிடப் பட்ட கருப்பு டிஷர்ட் அணிந்து கொண்டு பங்கேற்றார்.

assembly - 2026

இவரது செயல், சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அதிர்ச்சியைத் தந்தது. கடந்த 2018ல் ராமராஜ்ய ரத யாத்திரையின் போது, தமிமுன் அன்சாரி தூண்டிவிட்டே அவரது ஆட்டத்தைக் கண்டு கையறு நிலையில் எதுவும் செய்ய முடியாமல் வெறித்துப் பார்த்த படி, திமுக., தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு முழக்கம் எழுப்பினார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

தனது இசுலாமிய மதவெறிப் பேச்சுகளை தமிழன் குரல் என்று எதிரொலிக்கும் படியும், எங்கேயும் அது மார்க்கத்தின் குரல் என்று வந்துவிடக் கூடாது என்றும் தமிழகத்தில் இசுலாமிய இயக்கங்கள் முன்னெடுத்துள்ள தமிழ் தமிழர் பெயரில் வெளிக்காட்டும் போராட்டத்தில் அப்பட்டமாக இறங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

Related articles

Recent articles

spot_img