பத்திரிக்கை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து!

உள்ளூர் செய்திகள் சென்னை லைஃப் ஸ்டைல்
14 July15 high court

பத்திரிகைகள் மீது அரசு சார்பில் தொடரப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

*தி ஹிந்து, நக்கீரன், முரசொலி, தினகரன் , டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினமலர் நிறுவனங்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசின் சார்பில் அவதூறு வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக ஊடகங்கள், பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனைச் சட்டத்தை இந்த அரசு கடைபிடித்து வருகிறது. அவதூறு வழக்குகளால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை அடுத்து, பத்திரிகைகள், ஊடகங்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.