
கொரோனா அச்சம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கண்டமலங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் டார்ச் அடித்து சிகிச்சைப் பார்த்த சம்பவம் டிவிட்டர் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2 வயது மதிக்கத்தக்க சிறுவன் காய்ச்சல் காரணமாக கண்டமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
காய்ச்சல் என்றதும், மருத்துவமனை வாயிலிலேயே நிற்கவைக்கப்பட்ட சிறுவனை, மருத்துவர் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து டார்ச் அடித்துப் பார்த்து மருந்து எழுதிக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், காய்ச்சல் பாதித்த சிறுவனுக்கு மிக அலட்சியமாக மருத்துவம் பார்த்த மருத்துவரின் செயல் பதிவான வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.