மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை: செங்கோட்டையன்!

Published:

shencottaian

10-ம் வகுப்புப் பயின்ற மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்புப் படித்த மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு 80% மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், வருகைப் பதிவேட்டை அடிப்படையாக வைத்து 20% மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனால், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் முறைகேடு செய்து அரசிடம் அளிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே அமைச்சர் செங்கோட்டையன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img