கார் மீது பைக் மோதியதால் தூக்கி வீசப்பட்ட இளைஞர்! வைரல் வீடியோ!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
bike

கோவையை பேரூரை அடுத்த காளம்பாளையம் கள்ளுக்கடை பஸ் ஸ்டாண்ட் அருகே சிறுவாணி என்னும் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி பைக் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிரே வந்த கார் ஒன்று திரும்ப முயன்ற போது பைக் மீது மோதியிருக்கிறது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த இளைஞர் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

அதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்து நடந்த வாகனங்களை மீட்டு இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விபத்தின் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், தற்போது அந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.