சிறுமிகளிடம் தொடர் பாலியல் வன்கொடுமை! போக்ஸோவில் கைது!

Published:

vankodumai

தாம்பரம் பகுதியில் தொடர்ச்சியாக பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்ஸோவில் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

சென்னை அடுத்துள்ள கிழக்கு தாம்பரம் நாகம்மை தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி உதயகுமார். இவருக்கு வயது 36. கொரோனா ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வரும் சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோர்களிடம் உதயகுமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.

பின்னர் இதுபற்றி சிறுமியின் பெற்றோர் உதயகுமாரிடம் சென்று கேட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் தாம்பரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகாரளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் பேரில் உதயகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் இருக்கும் 4 சிறுமிகளிடம் தொடர்ச்சியாக அவர் பாலியல் தொந்தரவு அளித்துவந்தது தெரியவந்தது.

மேலும் இதுதொடர்பாக உதயகுமார் மீது சேலையூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இதனையடுத்து உதயகுமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

Related articles

Recent articles

spot_img