கமல் ஒரு முதுகெலும்பற்ற கோழை: எச்.ராஜா

உள்ளூர் செய்திகள் கோவை

h raja bjp - 2026

சென்னை:

விஸ்வரூபம் படத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் வரிந்து கட்டியபோது, அதை எதிர்கொள்ளத் திராணி இல்லாமல், நாட்டை விட்டு ஓடிப் போவேன் என்று சொன்ன நடிகர் கமல் ஹாசன் ஒரு முதுகெலும்பற்ற கோழை என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “முதல்வர் கனவு காண கமல் ஹாசனுக்கு உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். நாட்டில் இருக்கிற மக்கள் தொகையில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும், அரசியலில் வருவதற்கும் கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது. அந்த மாதிரி கமல்ஹாசனுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், முதல்வர் பதவியில் உட்காருபவர் எப்படி இருக்க வேண்டுமென்றால், அச்சமில்லாமல் முதுகெலும்போடு செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும்.

விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தபோது அழுது, புலம்பி இந்த நாட்டை விட்டே ஓடிப் போகப் போகிறேன் என்று சொன்ன கமல்ஹாசன் ஒரு முதுகெலும்பில்லாத கோழை. அவர் நாளை முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் கதி என்னவாகும். அது மிகப்பெரிய கேள்விக்குறி. அவர் ட்வீட்டில் முடிவெடுத்தால் முதல்வர் என்கிறார். முடிவு எடுத்தாலும் இவரால் ஒருக்காலும் முதல்வராக வர முடியாது. காரணம் முதுகெலும்பற்ற ஒரு கோழையை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று விமர்சித்தார்.

இதனிடையே எச்.ராஜாவின் கருத்தை கிண்டல் செய்யும் விதமாக, எலும்பு டாக்டர் எச்.ராஜா என்று மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.