அஜித் வீட்டில் வெடிகுண்டு! போனில் போலீஸுக்கு வந்த மிரட்டல்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சினிமா சென்னை
ajith

சமீப காலமாக திரைத்துறை பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒன்று வந்துள்ளது. அதனை கூறிய உடன் அந்த நபர் இணைப்பை துண்டித்திருக்கிறார்.

இந்த புகாரை அடுத்து நடிகர் அஜித் வீட்டுக்கு விரைந்த போலீசார், வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையில் எந்த வெடிகுண்டும் கிடைக்கப்பெறாத நிலையில், அது வெறும் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நபர் யார் என போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நபரை பிடிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் வீட்டிற்கு இதே போன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.