மதுரையில் தினகரன் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை

மதுரை:

மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் சிறிது நேர இடைவெளியில் வந்தனர். அப்போது ஓ.பி.எஸ்சை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்த அவரது ஆதரவாளர்களுக்கும், டி.டி.வி.தினகரனை வரவேற்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காக அங்கே கூடிருந்த காவல் துறையினர் தினகரன் தரப்பினரனைக் கட்டுப்படுத்தித் தடுத்தனர். அப்போது காவல்துறையினருக்கும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் விமான நிலையத்திற்கு வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோரை பத்திரமாக பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.