சீன கொடியை எரிக்க முயன்ற அர்ஜுன் சம்பத் கைது!

கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
arjunsampath
arjunsampath

சீனப் பொருட்களுக்கு தடை கோரி இன்று காலை இந்து மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரகங்களின் முன் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்க முயன்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ரயில் நிலையம் அருகே சீன நாட்டுக் கொடியை வெள்ளிக்கிழமை காலை எரிக்க முயன்றதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் கட்சி நிர்வாகிகள் 15 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

முன்னதாக, இவர்கள் அனைவரும் ஊர்வலமாக செல்ல முற்பட்டபோது போலீஸார் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.