கனடாவில் நேற்று நடைபெற்ற கனடா கிரான்ட் பிரிக்ஸ்சில் வெற்றி பெற்றதுடன் தனது கார் ரேஸ் பந்தய வரலாற்றில் செபஸ்டியன் வெட்டல் 50வது வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தாண்டுக்கான உலக சாம்பியனாக அவர் நீடிக்கிறார்.
நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜெர்மனியின் வீரரான செபஸ்டியன் வெட்டல், நேற்று நடந்த போட்டியில் 54-வது இடத்தில் இருந்து துவங்கி வெற்றி பெற்றார். இந்த சீசனில் வெட்டல் பெறும் 3-வது வெற்றி இதுவாகும்.



