பாகிஸ்தானின் தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் ஒரு மாத காலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி கூட்டம், பேரணி நடத்த தடை விதித்து மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த பகுதியில் மாவட்ட நிர்வாத்திற்கு எதிராக கூட்டம் நடத்தப்பட உள்ளதாக வெளியான அறிக்கையை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதியிட்ட இந்த உத்தரவை வெளியிட்ட மாவட்ட நீதிபதி, மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக தேவையில்லாத பொது கூட்டம், பேரணி நடைபெற உள்ளதாக அறிக்கை வெளியானதை தொடர்ந்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த அந்த அறிக்கையில், இந்த பகுதியில் பொது கூட்டம் நடத்த தேவையான மைதானங்கள் இல்லை என்பதாலுலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மஐம் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



