கொரோனா: சிகிச்சை பெற்று வந்த பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

Published:

suside

சென்னை அருகே கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த பெண் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனிடையே கொரோனாவால் தனிமைப்படுத்தப்படும் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதால் அதனை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை மதுரவாயிலில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் செல்வி, மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதனை அறிந்த அதிகாரிகள், அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மாடியில் இருந்து குதித்ததால் படுகாயம் அடைந்த செல்வி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வாட்டரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related articles

Recent articles

spot_img