சரக்கு ரயில்கள் மூலம் தெலுங்கானாவிலிருந்து நெல்லைக்கு அரிசி மூட்டைகள் வருகை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை
rice

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இன்று காலை நெல்லை ரயில் நிலையத்திற்கு 2 ஆயிரத்து 661 டன் அரிசி மூடைகள் வந்து சேர்ந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தையொட்டி பொதுவினியோக திட்டத்தில் அரிசி வினியோகம் செய்ய, மத்திய தொகுப்பில் இருந்து அரிசி மூடைகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் நெல்லை ரயில் நிலையத்திற்கு வரும் அரிசி மூடைகள், பின்னர் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று அதிகாலையில் நெல்லை ரயில் நிலையத்திற்கு தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் இருந்த 2661 டன் அரிசி மூடைகள் வந்து சேர்ந்தன. மொத்தம் 52 ஆயிரத்து 663 மூடைகளில் இறங்கி வைக்கப்பட்ட அரிசியை லாரிகள் மூலம் புரம் நுகர்பொருள் கிட்டங்கிக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

அங்கிருந்து நெல்லை, தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளுக்கு அரிசி மூடைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.