கார் ஒன்று இருசக்கர வாகனத்தை முட்டித் தள்ளும் சிசிடிவி காட்சிகள்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம்
accident

சென்னை துரைப்பாக்கம் அருகே அதிவேகமாகச் சென்ற கார் , இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், பெண் உட்பட இருவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலையில், மேட்டுக்குப்பம் பகுதியில் 3 தினங்களுக்கு முன்னர் கார் ஒன்று வேகமாகச்‌ சென்றது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனங்களில் மீது கார் பலமாக மோதியது.‌

acc

முதலில் ஒரு வாகனத்தில் மீது மோதிவிட்டு வேகாக சென்ற கார் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது மோதியது.இதில் பெண் உட்பட இருவர் தூக்கி வீசப்பட்டனர்.

இந்தக் காட்சி அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக கார் ஓட்டுநர் சுப்பாராவிடம் விசாரணை நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.