டிடிவி ஆதரவு வழக்குரைஞர் மீது வழக்குப் பதிவு

Published:

சிதம்பரம்:

டிடிவி ஆதரவு வழக்கறிஞர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தலைமைக் காவலர் ரவியை, வழக்கறிஞர் பிரபு என்பவர், செல்போனில் தரக் குறைவாகவும், ஆபாசமாகவும் தகாத முறையிலும் பேசியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது . இதை அடுத்து, பிரபு மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் போலீஸார்.

புகாருக்கு உள்ளான வழக்கறிஞர் பிரபு, அதிமுகவில் டிடிவி தினகரன் ஆதரவாளராக உள்ளார். மேலும், டிடிவி தினகரன் அணியின் வழக்கறிஞர் பிரிவிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related articles

Recent articles

spot_img