இந்துக்களைச் சீண்டும் ரிஹானா!

உலகம் சற்றுமுன்
Rihanna
Rihanna

இந்தியர்களை, குறிப்பாக இந்துக்களை அவமதிக்கும்படி செயல் புரிய ஒரு கூட்டம் சர்வதேச அளவில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் இணைந்த அமெரிக்க பாடகியான ரிஹானா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையிலான செயலை செய்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ஒற்றை ஆடை மட்டும் உடுத்தி ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். சரி இதிலென்ன வியப்பு, விளம்பரப் பிரியர்கள் செய்யும் செயல்தானே என்று கடந்துவிடலாமா என்றால் முடியாது.

அவரது இந்து வெறுப்பினை, இந்திய வெறுப்பினை வெளிப்படுத்தும்படி, இந்தியர்களால் பெரிதும் போற்றப்படும் விநாயகப்பெருமான் உருவம் பொறித்த டாலரை அணிந்திருக்கிறார். தில்லி விவசாயப் போராட்டத்தில் குரல் கொடுத்த பின்பு, வருமானத்திற்கு நல்ல ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார் போலும் என ட்விட்டர்வாசிகள் கொதித்து தங்கள் கண்டனங்களை பதிந்து வருகின்றனர்.

எங்கு சுத்தியும் இந்தியக் கடவுள்களை அவமதிக்கும் செயல்களுக்கு இவர்கள் வர எங்கிருந்து தைரியம் வருகிறது என கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விவசாய போராட்டத்திற்கு குரல் கொடுக்கப் போய், பெயர் கெட்டதுதான் மிச்சம். இப்போது இவரைப் போன்றோரது உண்மையான திட்டம் என்னவென்று உலகிற்கு வெளிச்சமாகிவிட்டது என்ற கருத்தும் பதியப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் மக்கள் பிரச்சனையில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதும், பெரும்பாலானவர்கள் பெரிதும் மதித்து வணங்கும் கடவுள்களை அவமதிப்பதும்தான் இந்த சர்வதேச பிரபலங்களின் லட்சியம் போலிருக்கிறது. ஆனால் இந்த லட்சியத்திற்குப் பின்னால், பல லட்சங்களும் இணைந்திருப்பதால்தான் இது தொடர் நிகழ்வாகிறது என்கிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.