வட மாநில ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு 10 நாள் போலீஸ் காவல்

Published:

கோவையில் அடுத்தடுத்து ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்து பிடிபட்ட வட மாநில கொள்ளையர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கோவையில் கடந்த 10ஆம் தேதி விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வடமாநிலங்களைச் சேர்ந்த 8 கொள்ளையர்கள், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை கோவை அழைத்து வந்த போலீசார், 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே கோவையில் வட மாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் தனியார் நிறுவனங்கள் அவர்களின் விவரங்களை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையார் பெரியய்யா அறிவுறுத்தியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img