குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை தேரோட்டம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவில் 5ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

சிவபூதகண வாத்தியங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், முருகன், நடராஜர், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.