பெங்களூரு சிறைக்கு சசிகலாவை சந்தித்த பின் சிறை வாசலில் நிருபர்களை பேட்டியளித்தார். அப்போது அவர் சசிகலா ஜெயலலிதா நினைவு நாளிலிருந்து மவுன விரதம் மேற்கொண்டுள்ளார். அவர் ஜனவரி இறுதி வரை மவுன விரதம் மேற்கொள்வார் என நினைப்பதாக கூறினார்.
நிருபர்களின் கேள்விகளுக்கு தினகரன் அளித்த பதில்கள்!
கட்சியில் யாரையும் நீக்கும் அதிகாரம் பொது செயலாளருக்கு மட்டுமே உண்டு. கட்சிக்கு துரோகம் செய்த பழனிச்சாமி அன் கோ நீக்கவேண்டும்.
“டெங்கு கொசு” ஜெயக்குமாருக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
மு.க.ஸ்டாலின் மீது அழகிரியின் குற்றச்சாட்டு உட்கட்சி விவகாரம். தேர்தலில் திமுக அசட்டையாக இருந்துவிட்டது. கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால் அதிமுக டெபாசிட் பரி கொடுத்திருக்கும்.
கிருஷ்ணபிரியா குறித்த கேள்விக்கு எங்கள் குடும்பத்திலிருந்து யார் அரசியலுக்கு வருவதாக இருந்தால் அதை சசிகலா முடிவு செய்வார்.



