விமான நிலையம் அருகே இறந்து கிடந்த நபர்!

Published:

dead-body
dead-body

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு முனையத்தின் அருகில் வாகனங்கள் நிறுத்தும் பகுதியானது அமைந்துள்ளது. அந்த பகுதியில் நீண்ட நேரமாக ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூங்கியபடி இருந்துள்ளார்.

அங்கிருந்த கார் டிரைவர்கள் அவர் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் எந்தவித அசைவும் இன்றி ஒரே இடத்தில் இருந்துள்ளார்.

இது குறித்து உடனடியாக சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து போலீசார் மருத்துவ குழுவினருடன் விரைந்து வந்து அந்த நபரை பரிசோதித்து பார்த்தனர்.

அந்தப் பரிசோதனையில் அவர் இறந்து விட்டதை அறிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபர் யார் என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் சைக்கிளில் டீ விற்பனை செய்து வந்தவர் என்பது மட்டும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

மேலும் அந்த நபர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img