வேலை செய்யும் வீட்டில் தங்கம் வைர நகைகளை திருடிய பணிப்பெண்!

Published:

diamond-ring-1
diamond-ring-1

வேலை செய்த வீட்டில் வைரநகை திருடிய பணிப்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேஷ்வரலு கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரிலுள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் கோவிலில் இருந்து சென்னைக்கு திரும்ப அவர்கள் பீரோவில் நகைகளை கழற்றி வைக்கும் போது அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் மகனின் திருமணத்திற்காக மருமகளுக்கு அணியவிருந்த வைர மோதிரம் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பீரோவின் கதவு உடைக்காமல் நகை திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது சந்தேகத்தின் பேரில் வீட்டு வேலை செய்யும் அம்பிகா என்பவரை விசாரித்த போது அவர் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் ஏற்கனவே 4 சவரன் தங்க நகையை திருடியதாகவும், அதை அவர்கள் கண்டுபிடிக்காததால் தற்போது மோதிரத்தை திருடியதாகவும் கூறியுள்ளார்.

அந்த பெண்ணிடமிருந்து வைர கம்மல் மற்றும் 4 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்துள்ளனர்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img