பெண் தர மறுத்த காதலியின் பெற்றோருக்கு வெட்டு! 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு!

Published:

sivasankaran - 2026

திருமணம் செய்ய பெண் கொடுக்காததால், ஒருதலைகாதலில் ஏற்பட்ட தகராறின் போது 8 மாத குழந்தையை கொலை சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி மகிழடி பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ். இவரின் மகள் ஏஞ்சலின். இவரது கணவர் ஆனந்த் செர்லின். இந்த தம்பதிக்கு அக்ஷயா குயின் என்ற 8 மாத குழந்தை உள்ள நிலையில், ஏஞ்சலின் மற்றும் ஆனந்த் செர்லின் வெளிநாட்டில் பணியாற்றி வந்துள்ளனர்.

இதனால் குழந்தை அக்ஷயா தாத்தா – பாட்டி அரவணைப்பில் வளர்ந்த நிலையில், ரசல்ராஜின் மற்றொரு மகள் ரோஸி. ரோஷி கோவையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இவரை ரோஸ்மியாபுரம் பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பவன் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சிவசங்கரன் வேறு மதத்தைச் சார்ந்தவனாக இருந்ததால், திருமணத்திற்கு ரசல்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

baby - 2026

இதனால் சிவசங்கரன் மற்றும் ரசல்ராஜ் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று சிவசங்கரன் ரோஷியை மணம் முடித்துவைக்க கேட்டு தகராறு செய்துள்ளார்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இதன்போது ஏற்பட்ட சண்டையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரசல்ராஜ் மற்றும் அவரின் மனைவியை கொடூரன் சிவசங்கரன் வெட்ட முயற்சித்துள்ளார்.

இதன்போது அருகில் உறங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் மீது வெட்டு விழுந்ததில், குழந்தை அக்ஷயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவத்தில் ரசல்ராஜ் மற்றும் எப்சிபாய் ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில், இருவரும் அங்குள்ள நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவசங்கரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஒருதலைகாதலில் கொலை நடந்துள்ளது உறுதியானது. கொடூரனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img