மருத்துவமனையில் நடிகை ரோஜா! பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

Published:

roja
roja

கோலிவுட்டில் செம்பருத்தி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் ரோஜா. இவர் 1990-களில் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்தார். உழைப்பாளி, சூரியன், அதிரடி படை, வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஆகிய ஹிட் படங்களில் நடித்து இருக்கின்றார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நிறைய திரைப்படங்களில் நடித்த ரோஜா இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். திருமணமான பின் படிப்படியாக சினிமாவை ஒதுக்கி அரசியலில் புகுந்தார். தற்போது ஆந்திராவில் எம்.எல்.ஏ.வாக ரோஜா இருக்கின்றார்.

இந்த நிலையில், நடிகை ரோஜா திடீரென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனவரி மாதமே செய்ய வேண்டிய பெரிய அறுவை சிகிச்சை அவர் செய்து கொள்ளாததால் நிலைமை மோசமடைந்துள்ளது.

தற்போது அறுவை சிகிச்சைகள் முடிந்து அவர் குணமடைந்து வருகிறார். இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ரோஜாவை பார்க்க மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img