வேலைப்பார்த்த வீட்டு இளம்பெண்ணின் போட்டோவை அனுப்பி இளைஞரை மயக்கிய பாட்டி!

whatsapp
whatsapp

வேறோரு பெண்ணின் புகைப்படத்தை தனது புகைப்படம் என்று கூறி அந்த பாட்டி செய்த அட்டுழியம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கால் ஒன்று வந்துள்ளது. முதலில் யார் பேசுவது என்று தெரியாமல் பேச ஆரம்பித்த அவர், அதில் பேசிய பெண்ணின் அழகான குரலுக்கு மயங்கியுள்ளார். இதனால் அவர் அந்த பெண்ணிற்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

சில நாட்கள் கடந்த நிலையில், தனது அழகான புகைப்படத்தை அனுப்புமாறு அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். அதனால், அந்த பெண்ணும் தனது புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய போது அவரது குரல் மட்டும் இல்லாமல் அவரும் பேரழகு என்று அந்த இளைஞர் அந்த பெண்ணை தீவிரமாக காதலிக்க தொடங்கினார்.

மேலும், தான் திருமணம் செய்தால் இந்த பெண்ணை மட்டும் தான் திருமணம் செய்வேன் என்று அந்த இளைஞன் அவரது குடும்பத்தினரிடம் கூறியதால் தனது மகன் ஆசைப்பட்டு விட்டான் என்பதற்காக அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதனால், நாம் நேரில் சென்று பெண்ணின் பெற்ரோரிடம் முறைப்படி பேசி திருமணம் நிச்சயம் செய்வதற்கு முடிவு செய்தனர். அதன் படி, அந்த இளைஞர் அந்த பெண்ணின் முகவரியை தேடிக் கண்டுபிடித்து, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரில் சென்றுள்ளார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அப்போது அந்த பெண் கொடுத்த முகவரியில், சுமார் 65 வயதான மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். முதலில், அந்த இளைஞர் அவர் தனது காதலியின் பாட்டியாக இருக்கலாம் என்று நினைத்துள்ளார். பின்னர், அந்த மூதாட்டியிடம் அவர் பேசிய பிறகு தான் தான் ஏமாற்ற பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், தனக்கு செல்போனில் அனுப்பப்பட்ட படமானது, அந்த மூதாட்டியின் இளமைக்கால படம் என அந்த இளைஞர் நினைத்துள்ளார். இதனால் அவரது குடும்பத்னர் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த அந்த இளைஞர் தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தையும், இளம்பெண்ணின் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்து, இதுபோல் அவரிடம் வேறு யாரும் ஏமாற வேண்டாம் என்று பதிவிட்டார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அந்த பதிவில் இருந்த இளம்பெண்ணின் புகைப்படமானது, அந்த மூதாட்டியின் இளமைக்கால புகைப்படம் கிடையாது,

அது தங்களது குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் புகைப்படம் என்று கூறி, மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர், மூதாட்டி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த மூதாட்டி, பணிப்பெண்ணாக வேலை செய்த வீட்டில் உள்ள இளம்பெண்ணின் படத்தை வாட்ஸ்-அப்பில் இளைஞருக்கு அனுப்பி ஆசையாக பேசியது தெரியவந்தது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

இதையடுத்து அந்த மூதாட்டியை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பிய நிலையில், சமூக வலைதளத்தில் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டதற்காக அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories