பேண்ட் பாக்கெட்டில் மறைத்து ரூ.19 லட்சம் மதிப்புடைய 465 கிராம் தங்கம் கடத்தல்! ஜெய்னுலாப்தீன் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
thirupathi-gold-gift1
thirupathi-gold-gift1

சென்னைக்கு துபாயில் இருந்து பேண்ட்டில் மறைத்து கடத்தி வந்த ரூ.19 லட்சம் மதிப்புடைய 465 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சோந்த ஜெய்னுலாப்தீன் (60) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.

அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அந்த சோதனையின் போது பேண்ட்டில் ரகசிய அறை வைத்து ரூ.19 லட்சத்தி 78 ஆயிரம் மதிப்புள்ள 465 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார்.

அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக ஜெய்னுலாப்தீனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதே போல் ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.3 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் திருச்சியில் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.