சிறுவனைக் கடத்தி மகளோடு குடித்தனம் வைத்த தாய்!

Published:

deepa 1 - 2026

சென்னை வியாசர்பாடி முத்துநகர் நாலாவது பிளாக்கை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி தீபா. இவரது மகளும் சென்னை அடுத்த கதிர்வேடு பாரதியார் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஸ்டீபன் டேவிட் மகனும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவருக்கும் 17 வயது தான் ஆகிறது.

இந்த காதலுக்கு தீபாவுக்கு சம்மதம். ஆனால் ஸ்டீபன் டேவிட் இதற்கு சம்மதிப்பாரா என்று அவருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.

மேலும் இருவருக்கும் 17 வயதுதான் ஆகிறது என்பதுதால் திருமண வயது தற்போது இல்லை என்பதை காரணம் காட்டி திருமணம் செய்ய ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்திருக்கிறார்.

திருமணத்தை தள்ளிப் போட்டால் எங்கே ஸ்டீபன் டேவிட்டின் குடும்பத்தினர் மனம்மாறி விடுவார்களோ? இந்தப் பையனும் மனம் மாறி விடுவானோ? என்று நினைத்து இருக்கிறார்.

இந்த பையன் தான் தனக்கு மருமகனாக வேண்டும் என்றும் அவர் விரும்பியிருக்கிறார். இதனால் அவர் ஒர் அதிரடி முடிவு எடுத்திருக்கிறார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

அதன்படி ஸ்டீபன் டேவிட் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவரது மகனையும் தனது மகளையும் அழைத்துக்கொண்டு கடந்த 1ஆம் தேதி அன்று பெங்களூர் சென்று இருக்கிறார்.

அங்கே ஒரு வாடகை வீடு எடுத்து இருவரையும் கணவன்-மனைவி போல் வாழ சொல்லியிருக்கிறார். தாம்பத்திய உறவு மேற்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

இதற்கிடையில் எனது மகனை காணவில்லை என்று ஒன்றாம் தேதியன்று புழல் போலீசில் புகார் அளித்திருக்கிறார் ஸ்டீபன் டேவிட்.

இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்ததில் சிறுவன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சென்று விசாரணை நடத்தியபோது 37 வயதான தீபா, தனது மகளுக்காக சிறுவனை கடத்தி வந்தது தெரியவந்தது.

தீபா, சிறுவன், சிறுமி உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்து சென்னை மாதவரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின்னர் சிறுவனுக்கும் சிறுமிக்கும் மருத்துவ பரிசோதனை செய்து மனரீதியான ஆலோசனை வழங்கி அவர்களை சிறார் காப்பகத்தில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

தீபாவை புழல் சிறையில் அடைக்க சொல்லி உத்தரவிட்டது. இதையடுத்து தீபா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related articles

Recent articles

spot_img