ஆண் நண்பனை ஆசைக்காட்டி ரிசார்ட்க்கு வரவழைத்த பெண்! நேர்ந்த விபரீதம்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை சற்றுமுன்
resort - 2026

ஒரு ஆண், ஒரு பெண் இருவரும் கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர்.

பள்ளி படிப்பை முடித்து விட்டு இருவரும் பிரிந்த நிலையில், தற்போது இருவரும் முகநூல் மூலம் பழகி வருகின்றனர். இதில், அந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ளது.

இந்த சூழலில் தனக்கு அவசர செலவு இருப்பதாக கூறி, அந்த பெண் தனது நண்பரிடம் இருந்து ரூபாய் 23 ஆயிரம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், இருவரும் தங்களின் முகநூலில் புகைப்படங்களைப் பரிமாறி நெருங்கி பழகியுள்ளனர்.

இதனையடுத்து, அந்த இளம்பெண், தனது நண்பரை ஆனைக்கட்டியில் உள்ள ரிசார்ட்டு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தன்னை ஒரு பெண் தனியாக அழைத்துவிட்டாள் என்று மிகவும் சதோஷமாக சென்ற அந்த இளைஞருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு அந்தப் பெண் தனது ஆண் நண்பர்கள் இருவரை(அப்துல்கலாம்(25), ஆபீப் அலி(23)) ஆயுதங்களுடன் வரவழைத்து, 3பேரும் சேர்ந்து அந்த இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இளைஞர் அவரிடம் அப்போதிருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு மீதி தொகையை இரண்டு நாள் கழித்துக் கொடுப்பதாகக் கூறி வீடு திரும்பியுள்ளார்.

தப்பி வந்த இளைஞர் சம்பவம் குறித்து தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த கோவை தடாகம் போலீசார், பணம் பறித்த அந்தப் பெண்ணையும், அவரது கூட்டாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.