காப்பகத்தில் இருந்த மனநலம் பாதித்த பெண் 9மாத கர்ப்பம்!

Published:

karpam
karpam

மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 9 மாதம் கர்ப்பமான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் முத்துப்பட்டியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு தனியார் காப்பகம் ஒன்று செயல்படுகிறது. இந்த காப்பகத்தில் சுமார் 45 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் இன்று காலை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் காப்பகத்தில் வேலை செய்யும் நபர்கள் அந்தப் பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது பெண்ணை பரிசோதித்த மருத்துவர் இவர் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் சுப்பிரமணியம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் உள்ளவர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அறிந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தொடர்ந்து போலீசார் காப்பகத்தில் இருப்பவர்கள் யாரேனும் இச்சம்பவத்தில் ஈடுபட்டார்களா, அல்லது கடந்த சில மாதங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது வீட்டிற்கு சென்று வந்த நிலையில் உறவினர்கள் யாரேனும் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காப்பகங்களில் ஆதரவற்றோருக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது சமூக ஆர்வலர்கள் சிலர்…,” மதுரையில் பல்வேறு காப்பகங்கள் தற்போதும் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றனர்.

நோயாளிகள் போல பாவிக்க வேண்டிய நபர்களை அடித்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Related articles

Recent articles

spot_img