விஜய் மன்ற மகளிர் அணி செயலாளருடன் தொடர்பு! மனைவியை கொடுமைப் படுத்தும் கணவன்!

Published:

muthu - 2026

சென்னை அடுத்த திருமழிசையை சேர்ந்த திவ்யா, கடந்த 2006ம் ஆண்டு முத்து என்பவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

திருமணத்தின்போது வரதட்சணையாக 200 சவரன் நகை கொடுத்துள்ளார் திவ்யா. ஆனாலும், திருமணத்திற்கு பின்னர் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார் முத்து.

அடிக்கடி பணம் கேட்டு திவ்யாவை அடித்து வந்துள்ளார் முத்து. இது போதாது என்று, விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஏஞ்சலுடன் கள்ள உறவில் இருக்கும் முத்து, அவருடன் நிரந்தரமாக வாழ வேண்டும் என்கிற நினைப்பில், திவ்யா விலகி சென்றுவிட நினைத்து, மேலும் மேலும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்து வருகிறாராம்.

இதற்கு மேலும் பொறுமையாக இருப்பதில் பிரயோசனம் இல்லை என்று கணவர் முத்து மீதும், விஜய் மக்கள் மன்ற சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஏஞ்சல் மீதும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் திவ்யா.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img