டிராபிக் ராமசாமிக்கு டிவிட்டரில் பெருகும் ஆதரவு

உள்ளூர் செய்திகள்

traffic-ramasamy சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஆதரவுக் குரல் பெருகிவருகிறது. இதற்காக, #WeStandWithTrafficRamasamy என ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. ஞாயிறு இன்று மதியம் தொடங்கி சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிராபிக் ராமசாமி மீதான நடவடிக்கையை விமர்சித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். அவரது சமூக ஆர்வ செயல்பாடுகளை நினைகூர்ந்து வருகின்றனர். முன்னதாக, காரை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி ஹோட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் பின்னர் பல்நோக்கி சிறப்பு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அதிகாலையில் கைது செய்து இவரை சிறையில் அடைத்ததற்கான நியாயமான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.