December 8, 2025, 9:23 PM
24.7 C
Chennai

ராஜபாளையம் சிவகாசியில் இருவர் கொலை…

830563 murter - 2025
பாலமுருகன்

ராஜபாளையம் அருகே முதியவரின் இறுதி ஊர்வலத்தில் தகராறு ஏற்பட்டதில் சுடுகாட்டுக்கு சென்றதும் 3 பேர் சேர்ந்து, வாலிபரை அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் அருகே உள்ள காளவாசல் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (வயது 70) என்பவர் மரணம் அடைந்தார். இவரது உடலை மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்(37), இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஊர்வலத்தில் உடன் சென்றார். சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் பூமாலையில் இருந்து பூக்களை எடுத்து தெருவில் வீசிக்கொண்டே பாலமுருகன் சென்றார். தகராறு இதை சிவகாசி அருகே பாலையாபுரம் கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் தட்டிக்கேட்டார். பாலமுருகன் அப்படித்தான் போடுவேன் என்று கூறினார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் சமரசம் செய்தனர். அதன்பின் சுடுகாட்டுக்கு சென்று, முதியவர் ராமசாமி உடலை அடக்கம் செய்து கொண்டிருந்தனர். அடித்துக்கொலை அப்போது சுந்தர்ராஜன் மற்றும் அவரது மகன்கள் முத்துகிருஷ்ணன், முத்துச்செல்வம் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலமுருகனிடம் தகராறு செய்தனர். மேலும் அவர்கள் உருட்டுக்கட்டையால் பாலமுருகனை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தந்தை, மகன்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த கொலை குறித்து பாலமுருகன் மனைவி முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே சொத்து தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் ஒருவர் பலி -:

IMG 20220818 WA0120 1 - 2025

சிவகாசி அருகே சொத்து தகராறு 4 பேருக்கு அரிவாள் விட்டு விழுந்தது இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு முத்தீஸ்வரன் (52 )முருகேஸ்வரி (48) முருகன் (32) மணிகண்டன் (29) ராஜேஸ்வரி (24) விநாயகமூர்த்தி (22) ஆகிய 6 பிள்ளைகள் உள்ளனர். இவர்களிடையே நீண்ட காலமாக குடும்ப சொத்து பிரச்சினை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் சொத்து பிரச்சனை குறித்து பேசி முடிவு எடுக்க முத்தீஸ்வரன் அனைவரையும் அழைத்துள்ளனர் . அதன் பேரில் அனைவரும் நேற்று மாலை சிவகாசி ஒரு அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் முத்தீஸ் வரன் வீட்டில் ஒன்றுகூடி பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது ஒருவருக்கு ஒருவர் வாய் தவறாக ஏற்பட்டுள்ளது இதில் கம்பு, அரிவாள், கடப்பாறையால் ஒருவருக்கொருவர் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கழுத்து அறுக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் முருகன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் முருகன் மனைவி இந்திராதேவி, இந்திராதேவியின் தாயார் பெரியதாய், மணிகண்டன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக முத்தீஸ்வரனை போலீஸார் கைது செய்து மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்

IMG 20220818 WA0121 - 2025
IMG 20220818 WA0122 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Entertainment News

Popular Categories