images 68 1 - 2026

மாணவி பாலியல் துன்புறுத்தல் வாலிபருக்கு 10 வருடம் கடுங்காவல் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நஷ்ட ஈடு ஆக 5 லட்சம்..

உள்ளூர் செய்திகள்
images 68 1 - 2026

பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் வாலிபருக்கு 10 வருடம் கடுங்காவல் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நஷ்ட ஈடு ஆக அஞ்சு லட்சம் வழங்க தமிழக அரசுக்கு ஸ்த்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றம் பரிந்துரை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வாலிபர் அருண் வயசு 26 இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சுழி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்

இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் அருணை கைது செய்தனர்

மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள
மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் மாணவியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வாலிபர் அருணுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார் மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூபாய் 5 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க பரிந்துரை செய்தும் உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.