images 89 - 2026

சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி தமிழகத்தில் -அர்ஜுன் சம்பத்

உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் ஜெஎம்2 நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரான இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர் சந்தித்த போது திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி என தெரிவித்தார்

ஜெஎம்2 நீதிமன்றத்தில் தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து வழக்கு பதிவு செய்ததால் தற்போது இன்று வந்து விளக்கமளித்துள்ளேன்.
திமுக சேர்ந்தவர்கள் தேர்தல் விதிமுறைகள் அதிகமாக ஈடுபட்டனர்.

வள்ளலார் 200 ம் ஆண்டு விழா முன்னிட்டு அரசு 50 வாரம் விழா என அறிவித்துள்ளது. தமிழக அரசு

வள்ளலாரின் கொள்கை மதுவிலக்கு, புலால் நிறுத்தல், ஜீவதாரண்ய கொள்கை பூரண மது விலக்கு . பசிப்பிணி போக்குவது உள்ளிட்ட கொள்கை யாவும் இதனை தமிழக அரசு முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

கருணை இல்லாத ஆட்சி என, வள்ளலார் கூறியது போல் தற்போது மின் கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு விலைவாசி உயர்வு என்ன மக்கள் நலனில் கருணை இல்லாமல் தமிழக அரசு ஏற்றி வருவதை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறு பேசியது குறித்து பாஜக .மற்றும்
விஸ்வஹிந்து
அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து இதுவரை நடவடிக்கை இல்லை.
ஆனால் திமுகவினர் தங்களது சாதகமானவர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது மேலும் கவிஞர் வைரமுத்து மீது போடப்பட்ட வழக்கில் இராஜபாளையம் நீதிமன்றம் அவர் கூறிய கருத்து சரி என்ன தீர்ப்பளித்து வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளனர்.
இது ஆண்டாள் பக்தர்கள் இடையே வேதனையளிக்கிறது. மேலும் சட்ட போராட்டத்தில் தொடர்ந்து அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போராடுவோம் என தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி என தெரிவித்தார் மேலும் இந்த ஆட்சியில் திராவிட மாடல் என கூறிக்கொண்டு மக்களுக்கான நலனில் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு முன் வைத்தார்.

மேலும் இராஜபாளையம் தேவதானம் பகுதியில் பெரியகுளம் கண்மாயில் திமுகவினர் தொடர்ந்து மண் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் நிலங்களில் கொள்ளை அடிக்கப்படும்
கனிமவளங்களை கொள்ளை அடிப்பதை கண்டு அமைதியாக இருக்க மாட்டோம் நிச்சயமாக இதற்கு குரல் கொடுப்போம். மேலும் திமுக ஆட்சி காலத்தில் கனிமங்கள் வழங்கல் சுரண்டல் அதிகமாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

images 89 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.