நெல்லை அருகே இஞ்சினீ யரிங் மாணவர் வெட்டிக் கொலை

உள்ளூர் செய்திகள்

திருநெல்வேலி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நம்பியான்விளை கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் ராஜா (வயது20). தனியார் பொறியியல் கல்லூரி மாணவர். இன்று வெள்ளிகிழமை காலை தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து காதல் விவகாரத்தால் டேவிட்ராஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்று விசாரிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.