விண்ணப்பித்த 3 நாளில் பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் விசாரணை முடிக்க ஏற்பாடு!

Published:

Indian-passport சென்னை: புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 3 நாட்களில் போலீஸ் விசாரணையை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது ஆகும் 7 நாள் நடைமுறையை எளிதாக்க இந்த ஏற்பாடாம்! இது குறித்து அதிகாரிகள் தெரிவித்தபோது, பொதுமக்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் போலீஸ் விசாரணை நடத்தி முடித்து அறிக்கை கிடைக்க 3 நாட்களுக்கு மேல் ஆகி விடுகிறது. சென்னையில் உடனே தகவல் வந்து விடும். ஆனால் கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், வேலூர் உள்பட அதிக தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து போலீஸ் விசாரித்து தகவல் அனுப்ப காலதாமதம் ஆகி விடுகிறது. இதைத் தவிர்க்க விசாரணை நடத்தும் போலீசாருக்கு இண்டர்நெட் வசதியுடன் ‘டேப்’ இருந்தால் அனைத்து விவரங்களையும் அதில் பதிவு செய்து உடனுக்குடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் மூலம் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு தகவல் வந்து விடும். இதனால் 3 நாளில் போலீஸ் விசாரணை முடிக்கப்பட்டு விடும். பொதுமக்களுக்கும் பாஸ்போர்ட் சீக்கிரம் கிடைக்க வழிவகை காணப்படும். இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் தொடர்பாக விசாரணை நடத்தும் ஒவ்வொரு போலீஸ் நிலைய போலீசாருக்கும் ‘டேப்’ வழங்கினால் அதற்கு எவ்வளவு செலவாகும். இதை எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் அமுல்படுத்த முடியுமா? அல்லது படிப்படியாக அமுல்படுத்துவதா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது – என்று தெரிவித்தனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img