ஆளும் தமிழக அரசு மீது பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எம்எல்ஏ அருப்புக்கோட்டையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்
ஆளும் தமிழக அரசு (திமுக) மீது பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர்.ஆகவே வரும் பாராளுமன்றத்தேர்தலில் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றிபுபெறும் என அருப்புக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், வியாழக்கிழமை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை காந்திநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அருப்புக்கோட்டை ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுக்கும்,வாக்குச்சாவடி முகவர்களுக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தனது மூத்த மகளது திருமணப் பத்திரிக்கைகளை வியாழக்கிழமை பிற்பகலில் நேரில் வழங்கினார்.உடன் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டச்செயலாளர் கே.ரவிச்சந்திரன்,அருப்புக்கோட்டை ஒன்றியச்செயலாளர்கள் யோகா.வாசுதேவன்,,போடம்பட்டி சங்கரலிங்கம்,,நகரச்செயலாளர் சக்திவேல்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் ராமதிலகவதி, தகவல் தொழில்நுட்ப மாவட்டச்செயலாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.அதன்பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயக்குமார் உரையாற்றியதாவது,ஆளும் திமுக அரசு பெண்களுக்கு மாதம் ரூ1000 வழங்குதல்,அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டுவருதல், நீட் தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
மேலும் முன்பு,அதிமுக அரசு கொண்டுவந்த ,பெண்களுக்கான தாலிக்குத்தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் திமுக அரசு ரத்து செய்தது, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, உள்ளிட்டவற்றால் பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியே வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறும்,என அவர் தெரிவித்தார்.உடன் திரளான தொண்டர்களும், அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் பலரும் நேரில் கலந்து கொண்டனர்.