உள்ளூர் செய்திகள் 4 பேரை திருமணம் செய்து நகை பணம் ஏமாற்றி, 5-வது திருமணத்துக்கு...

4 பேரை திருமணம் செய்து நகை பணம் ஏமாற்றி, 5-வது திருமணத்துக்கு முயன்ற பெண் கைது!

-

- Advertisment -

சினிமா:

புதிய தோற்றத்தில் அமிர்கான்! வைரலாகும் புகைப்படம்!

லால் சிங் சத்தா என்கிற ஹிந்தி படம் ஒன்றில் நடித்துவருகிறார் அமீர்கான். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அமீர்கானின் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது.

பிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி!

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்!

குற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

24 ஏஎம் ஸ்டூடியோவிடம் இருந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோவுக்கு கைமாறும் படம்!

முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க போகிறார் என பல பில்டப்புகளுடன் தொடங்கிய அந்த படம், அப்புறம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

சர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி!

இதையேதான் ரஷ்ய ஜோசப் ஸ்டாலின் சொன்னான் ஹிட்லரும் சொன்னான் பாசிச திமுக ஒழிக

ஊடகவியலாளர் மதனை மிரட்டிய திமுக?! டிவிட்டர் கணக்கை முடக்கியதால் கடுப்பான நெட்டிசன்ஸ்!

வின் டிவி.,யில் தற்போது செய்தியாளராகப் பணியாற்றும் மதன் ரவிசந்திரனுக்கு திமுக.,வினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமூகத் தளமான டிவிட்டர் தளத்தில், மதன் கணக்கு முடக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, சமூக ஊடகங்களில் பாஜக.,வினர், ஆதரவாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

முரசொலி- ‘பஞ்சமி’யில்! அண்ணா அறிவாலயம் -அடிமாட்டு ‘நில அபகரிப்பில்’ : சர்ச்சையில் சிக்கிய திமுக!

திமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,!

பப்ஜி – PUBG விளையாட்டை தடை செய்ய ராமதாஸ் கோரிக்கை!

எனவே, பப்ஜி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

ஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் இட்லி!

தேவையான பொருட்கள்: ஓட்ஸ் ...

விமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம்! 12 மணி நேர தாமதம்!

இறுதியாக சுமார் 11.30 மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு விமானம் காற்றில் பறந்தது. சரி தாமதத்திற்கு காரணம் என்ன? ஒரு எலி தான்!

ஐயப்ப பூஜைக்கு பூப் பறிக்க குளத்தில் இறங்கி… சோகம்!

விசாகப்பட்டினத்தில் சோகம். சேற்றில் சிக்கி இருவர் மரணம்.

பேயாய் மாறி பொதுமக்களை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள் கைது!

யுடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டதாக ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் “ஆபரஷன் மா“ 60 இளைஞர்களுக்கு கிடைத்த மறுவாழ்வு.!

இந்திய இராணுவத்தின் 'ஆபரேஷன் மா' மூலம் ஜம்மு-காஷ்மீரின் 60 இளைஞர்களை பயங்கரவாத குழுக்களிடமிருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது!!

அந்த 5 ஏக்கர் நிலமும், ராமஜன்ம பூமியின் 67 ஏக்கர் நிலத்துக்குள்தான் வேண்டுமாம்! பிரச்னையைக் கிளப்பும் முஸ்லிம்கள்!

பாபரி மஸ்ஜிதுக்கு பதிலாக வழங்கப்படும் இந்த ‘நன்கொடை’ தங்களுக்கு பிடிக்காது என்று அயோத்தி முனிசிபல் கார்ப்பரேட்டர் ஹாஜி ஆசாத் அகமது தெரிவித்தார்.

காஷ்மீரில் மீண்டும்… மினி பஸ், ரயில் சேவைகள்: நெரிசலில் சிக்கிய ஸ்ரீநகர்!

காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் நேற்று முதல் 'மினி' பஸ்கள் இயங்கத் தொடங்கின. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படாத பஸ் போக்குவரத்து நேற்று முதல் துவங்கியது.

பவனுக்கு 3 மனைவிகள், 5 குழந்தைகள்! அவர்கள் எங்கே படிக்கிறார்கள்?”: ஜெகன் கேள்வி!

ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்பு வரை ஆங்கில மீடியம். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் 7, 8, 9, 10. நான்காண்டுகளில் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில மீடியம் அமல் செய்வோம். விரைவில் முழு அளவில் கல்விக் கட்டணத்தை திருப்பித் தருவோம்.

இன்று… குருநானக் ஜயந்தி தினம்!

பஞ்சாபியர்கள் மட்டுமின்றி உலக அளவில் பலரும் குருநானக்கை வணங்கி 'குருபூரப்' பண்டிகையை கொண்டாடுகிறார்கள். சீக்கியர்கள் ஒரே கடவுளை வழிபடுபவர்கள். ஓம்காரத்தை ஒரே தெய்வமாக பூஜை செய்பவர்கள்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.18, ஆகவும், டீசல் விலை...
- Advertisement -
- Advertisement -

சென்னை:

நான்கு இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை பணத்தைப் பறித்துக் கொண்டு பின்னர் கழற்றிவிட்டு ஏமாற்றிய பெண், 4வது கணவர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

 

சென்னை பி.வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் கட்டிட காண்டிராக்டர் சீனிவாசன் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘‘கோவையைச் சேர்ந்த காயத்ரி என்ற பி.எஸ்.சி. பட்டதாரி பெண்ணை கடந்த 2014 நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்குப் பிறகு அவளது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவள் ஏற்கெனவே 3 பேரை திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் இருந்து நகை பணத்தை பறித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டு, பின்னர் என்னை மணந்து கொண்டது எனக்குத் தெரியவந்தது. தற்போது 5–வதாக இன்னொரு இளைஞரைத் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்து வருகிறாள். அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்தப் புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி, வழக்குப் பதிவு செய்து காயத்ரியைப் பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவளது உண்மையான பெயர் இந்து என்பதும், தாய்–தந்தை இல்லாத அவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பி.எஸ்.சி. படித்து வந்ததும் தெரியவந்தது. அவள், இணைய தளங்களில் வரன் தேடி வசதியான இளைஞர்களைத் தனது வலையில் வீழ்த்தி அவர்களைத் திருமணம் செய்துகொண்டு, நகை பணத்தை அபகரித்த பிறகு அவர்களைக் கழற்றி விடுவதும் தெரியவந்தது.

இதற்காக அவள் தனது பெயரை இந்து, சுபிக்‌ஷா, சுந்தரவள்ளி, காயத்ரி என பல பெயர்களில் மாற்றி மோசடி செய்திருக்கிறாள்.

காயத்ரி 2010–ம் ஆண்டு நரசிம்மராவ் என்ற கட்டிட காண்டிராக்டரை திருமணம் செய்திருக்கிறாள். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தைப் பறித்துவிட்டு விவாகரத்து பெற்றுவிட்டாள்.

பின்னர் 2012–ம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்திருக்கிறாள். இவரிடம் இருந்தும் ரூ.1 லட்சம் பெற்று விட்டு, விவாகரத்து வழக்கினைத் தொடர்ந்திருக்கிறாள். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது தெரியவந்துள்ளது.

பின்னர் 2013–ம் ஆண்டு கோவில் பூசாரி ராஜகோபால் என்பவரைத் திருமணம் செய்ய முயன்று, ரூ.1 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகையை அபகரித்திருக்கிறாள். இதன் பிறகு காயத்ரி என்ற பெயரில் முகப்பேர் சீனிவாசனை தனது வலையில் வீழ்த்தியிருக்கிறாள். அவரிடம் தனக்கு கடன் இருப்பதாகக் கூறி, ரூ.50 ஆயிரம் பணம், 5 பவுன் நகை ஆகியவற்றைப் பெற்றிருக்கிறாள். மேலும் ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி அனுபவித்திருக்கிறாள்.

அதன் பிறகு அம்பத்தூரைச் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞரை தனது திருமண வலையில் வீழ்த்தியிருக்கிறாள். இவர்களது திருமணம் திருவொற்றியூரில் நடப்பதாக இருந்தது. இதை அறிந்த சீனிவாசன் திருமங்கலம் போலீசில் புகார் செய்ததால், விசாரணை செய்த போலீஸார் தற்போது காயத்ரியை கைது செய்துள்ளனர்.

Sponsors

Sponsors

Sponsors

Loading...

- Advertisement -
-Advertisement-
-Advertisement-

Follow Dhinasari :

17,952FansLike
169FollowersFollow
697FollowersFollow
14,500SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |

Loading...

Adblock Detected!

Our website Tamil Dhinasari is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.