சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி உடல் வைக்கப் பட்டிருக்கும் ராஜாஜி ஹாலுக்கு விமான நிலையத்தில் இருந்து நேராக வந்த மோடி, அங்கே கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அருகில் இருந்த மு.க.ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள், கனிமொழி, செல்வி உள்ளிட்டோருக்கும் ஆறுதல் கூறினார்.




