சென்னை கணவன் தியாகுவை சேர்த்து வைக்கக் கோரி தர்னா போராட்டம் நடத்தி வரும் கவிஞர் தாமரைக்கு ஆதரவாக, எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி, தனி வாழ்க்கை வேறு? கொள்கை வேறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் கூறிய கருத்து: தனது தனிப்பட்டபிரச்சினையை தமிழ் தேசிய வாதம், பெரியாரிஸம், மார்க்சியம் என்பவற்றோடு குழப்பிக் கொள்வதில் நியாயமில்லை. என்ற ஒரு கருத்து, பொது வாழ்வில் இருக்கும் இருவரின் குடும்பப் பிரச்சினை பற்றிய கருத்துகளில் பலரால் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. எனக்கு எழும் கேள்வி இதுதான்: அப்படியானால் எந்த அரசியல் தத்துவத்துக்கும் தனி மனித வாழ்க்கை நடத்தைக்கும் தொடர்பே இருக்கத் தேவையில்லையா? நாம் கற்கும்பயிலும் கோட்பாடுகள் தத்துவங்கள் நம் தனிவாழ்க்கைக்கானவை இல்லையா? தனிவாழ்க்கை வேறு ? கொள்கை வேறா ?
Popular Categories



