தஞ்சை கோயிலில் ரூ.100 கோடி மதிப்பில் பஞ்ச லோக சிலைகள் கொள்ளை!

தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவிலில் ரூ.100 கோடி மதிப்பிலான 2 பஞ்சலோக சிலைகள் கொள்ளை போனதும் சிலைகள் பல காணாமல் போயுள்ளதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் தமிழக பாரம்பரிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாகத் திகழும் இதனை மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டியுள்ளான். தற்போது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப் படும் இந்தக் கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

இந்தக் கோவிலுக்கு 13 பஞ்ச லோக சிலைகளை பொய்கை நாட்டைச் சேர்ந்த தென்னவன் மூவேந்த வேளாண் வழங்கியுள்ளார். இவை அனைத்தும் கோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இதில் 75 செ.மீ. உயரம் உடைய ராஜராஜ சோழன் சிலையும், 55 செ.மீ. உயரமுள்ள பட்டத்து இளவரசி லோகமாதேவியார் சிலையும் சிறப்பானவை. இந்த இரு சிலைகளும் காணாமல் போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் விசாரித்ததில் அது உண்மை என தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

இந்தப் புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த 2 பஞ்சலோக சிலைகளும் ரூ.100 கோடி மதிப்புடையவை என்று கூறப் படுகிறது.

இதனிடையே, சிலைகள் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இந்த வழக்கு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அதை அடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராமன், அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் ஆகியோர் தஞ்சைக்கு வந்து இது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கொள்ளை போன சிலைகள் குறித்த ஆதாரங்கள் உள்ளன. அந்தச் சிலைகள் தற்போது குஜராத்தில் உள்ள கௌதம் சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அவற்றை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

மேலும் இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, பெரிய கோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் இருந்த மேலும் பல சிலைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories