
சென்னை : ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து நள்ளிரவில் கோபாலபுரம் மற்றும் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது
காஞ்சிபுரத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்தது. போலீசார் மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



