புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே வண்ணிச்சிபட்டிணம் கடலில் மனித நேய ஜனநாயக கட்சியினர் கடலில் இறங்கி காவிரி மேலாண்மை் வாரியம் அமைக்ககோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள வண்ணிச்சிப்பட்டினம் கிராமத்தில் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட பெருளாளர் சேக் இஸ்மாயில் தலைமை வகித்தார்.மற்றும் மாவட்ட செயலாளர் முபாரக் அலி மற்றும் மாநில தகவல் தொழிற்நுட்ப அணி செயலாளர் ஹாரிஸ் ஆகியோர் பேசினர்.
மற்றும் போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மீர் அலி, ஒலி முகம்மது, செய்யது அபுதாஹிர், அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, நகர செயலாளர் ஜகுபர் சாதிக், நகர துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ், மாணவர் அணிச் செயலாளர் பரீத்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்…