
தமிழக அரசியல் கட்சி ஒன்றின் பொதுச் செயலராக அறியப் பட்ட வைகோ, பிரதமர் மோடி ஹெலிகாப்டரிலேயே பயணம் செய்கிறார் என்றும் அவரால் சாலையில் பயணித்து பொதுமக்களை சந்திக்க முடியாத கோழை என்றும் வைகோ கூறியிருந்தார். அவரது கருத்துக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் எதிர்வினை ஆற்றியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை என்றும் ஒரு பயந்தாங்கொள்ளி என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். மேலும் தமிழகத்தில் சாலையில் பயணிக்கும் தைரியம் மோடிக்கு இல்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தன் நிலை மறந்து வரம்பு மீறீப் பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் அவரது கருத்துக்கு எதிர் வினை ஆற்றும் வகையில், தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலளித்துள்ளார்.
பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே. பிரதமரின் வருகையை கோழை, பயந்தாங்கொள்ளி என கீழ்த்தரமாக விமர்சித்த வைகோவை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.