புதிய பயணத்தில் புதுமுகங்கள் !

Published:

puthiya payanam - 2026புதிய பயணம் பரமேஸ்வர் என்ற புதுமுகம் தயாரித்து நடிக்கும் படம்.  அழகு, சஞ்சு, ஹரிப்ரியா, பேபி தன்யா, வான்யா, கவிஞர் கருப்புராஜா என  பலர் நடிக்கிறார்கள்.

மகேஷ் சுப்பிரமணியம், ஆரி ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். தஷி இசை அமைக்கிறார். மாதேஷ்வரா இயக்குகிறார். மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் எதாவது ஒரு சாதனையை செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், என்பதை உணர்த்துவது தான் இப்படத்தின் கரு என படம் பற்றி கூறுகிறார் அதன் இயக்குனர்.

பரமேஸ்வரர் சாதாரண விவசாயி , தனது உழைப்பால் உயர்ந்து தனது மகள்களை நல்லபடியாக வளர்த்து, அவர்களுக்கு திருமணம் செய்துக் கொடுக்கிறார்.பின்னர் மகள்களின் சுயநலத்தால் அவர் புறக்கணிக்கப்படுகிறார். இதற்காக துவண்டு போகாமல், மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வரும் பரமேஸ்வரர், தனது உழைப்பால் எப்படி உயர்ந்து சாதிக்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை. என்றார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img