டெங்கு காய்ச்சல் பாதிப்பு !5 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம்

tengu - 2026டெங்கு’ காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, ஐந்து நபர்கள், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருவ மழையால், சில வாரங்களாக, மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஈரோடு, சத்தியமங்கலம், உடுமலை மற்றும் கோவையை சேர்ந்த, ஐந்து பேர், காய்ச்சலால், கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தனர்.

டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, இவர்களுக்கு ‘டெங்கு’ காய்ச்சல் இருப்பது, தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை டீன், அசோகன் கூறுகையில், டெங்கு பாதித்த, ஐந்து நபர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது உடல் நலத்துடன் உள்ளனர். ”டெங்கு குறித்து,மக்கள் பயப்படத் தேவையில்லை. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் இதன் பாதிப்பிலிருந்து விடுபடலாம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.