November 28, 2021, 8:30 am
More

  போதையில் தகராறு; ஆடைகளைக் கழற்றி போலீசாருடன் ரகளை! போலீஸார் மீதே புகார் கொடுத்த மாடல் பெண்!

  இதைக் கேட்டதும் போதையிலிருந்த மேகா, ஆவேசத்துடன் மாடியிலிருந்து கீழிறங்கி வந்து, அலோக்கை சத்தம் போட்டுள்ளார். தொடர்ந்து வாய்த் தகராறு முற்றி, அலோக்கின் கன்னத்தில் பளார் என ஒரு அறை கொடுத்துள்ளார்.

  Model Oshiwara - 1

  மும்பை: டேராடூனைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் மேகா சர்மா. இவர் ஒரு மாடலிங் துறையில் இருந்து வருகிறார். மும்பையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் குடியிருந்து வரும் இவர், கடந்த நான்கு நாட்களாக டிவிட்டர், செய்தித் தளங்களில் செய்தியாகிப் போனார். காரணம், போதை தலைக்கு ஏறி, இவர் செய்த செயல்கள்!

  மேகா சர்மா குடியிருப்பதும் மிகப்பெரிய அப்பார்ட்மெண்டான லோகண்ட்வாலா காம்ப்ளெக்ஸ். செக்யூரிட்டிகள் கண்காணிப்பு எப்போதும் உண்டு. மது அருந்தும் பழக்கம் கொண்ட மேகா சர்மா, கடந்த அக்.25ம் தேதி இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு இன்டர்காமில் செக்யூரிட்டியை அழைத்திருக்கிறார். அந்த நேரத்தில் அலோக் என்பவர் இரவுப் பணியில் இருந்துள்ளார்.அவர் போனில் “என்ன விஷயம்?” என்று கேட்டதற்கு “ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி வா” என்று கூறியிருக்கிறார். அதற்கு அலோக், “இரவு நேர டியூட்டியில் இருக்கிறேன், இப்போது போக முடியாது” என்று சொல்லி இருக்கிறார்.

  இதைக் கேட்டதும் போதையிலிருந்த மேகா, ஆவேசத்துடன் மாடியிலிருந்து கீழிறங்கி வந்து, அலோக்கை சத்தம் போட்டுள்ளார். தொடர்ந்து வாய்த் தகராறு முற்றி, அலோக்கின் கன்னத்தில் பளார் என ஒரு அறை கொடுத்துள்ளார்.

  தொடர்ந்து, போலீஸுக்கு போன் செய்துள்ளார். ஒரு கான்ஸ்டபிள் விரைந்து வந்துள்ளார். அவரது போதை நிலை கண்ட கான்ஸ்டபிள், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக பேசியுள்ளார். தன்னை அடித்துவிட்டதாக அலோக் கூறியதும், மேகாவைப் பார்த்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு வா என்று கூறியுள்ளார் கான்ஸ்டபிள். ஆனால், ஒரு பெண்ணை இரவு நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல சட்டத்தில் இடமில்லை என்றும், வீட்டில் விசாரணை வேண்டுமானால் நடத்தலாம் என்றும் அவர் கூற, மேற்கொண்டு கான்ஸ்டபிளுடன் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

  உங்களுடன் ஒரு பெண் போலீசும் இல்லை, எனவே, நான் உங்களுடன் இப்போது வர மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, மாடிப் பகுதியில் உள்ள தன் வீட்டுக்குச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், கான்ஸ்டபிள் அவரை மேலே செல்ல அனுமதிக்காமல் தடுக்கவே கோபம் அடைந்த மேகா, அந்த கான்ஸ்டபிளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன் மேலாடையைக் கழற்றத் தொடங்கினார்.

  இதனால் அந்த கான்ஸ்டபிளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தொடர்ந்து மற்ற செக்யூரிடிகளும் வர பிரச்னை பெரிதாகியுள்ளது.

  இந்நிலையில், மேகா மீது போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் பதிவு செய்யப் பட்டது. அதேபோல், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மேகா அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

  இது குறித்து மேகா சர்மா செய்தியாளர்களிடம் கூறியபோது, என்னிடம் செக்யூரிடி தவறாக நடக்க முயன்றார். போலீஸும் வேடிக்கை பார்த்தது. தொடர்ந்து என்னை அந்த இரவு நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி தகராறு செய்தனர். எனவே வேறு வழி தெரியாமல், நான் மேலாடையைக் கழற்றினேன். கான்ஸ்டபிளின் நடவடிக்கை குறித்து போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் என் புகாரை பதிவு செய்ய மறுத்துவிட்டார்கள். குற்றவியல் சட்ட முறை 160ன் கீழ், பெண்கள் நேரடியாக காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை. அவரது குடும்பத்தார் முன்னிலையில் விசாரணை செய்யலாம்… என்று கூறியுள்ளார்.

  இந்தப் பிரச்னை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் சூடாகக் கிளம்பியுள்ளது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,746FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-