
சென்னை: சர்கார் கதை வருண் ராஜேந்திரனுடையதுதான் என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டதால், சர்கார் – வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த விசாரணையை நேரில் காண ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றம் வந்திருந்னர். நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது
சர்க்கார் திரைப்படத்தின் கதை ராஜேந்திரனுடையது என்பதை ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டதை அடுத்து, வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. சர்க்கார் படத்தில் வருன் ராஜேந்திரன் பெயர் போடப்படும், நன்றி தெரிவிக்கப்படும்…. என்று ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இதை அடுத்து, சர்கார் வெளியாவதில் இருந்து வந்த சிக்கல் தீர்த்துவைக்கப் பட்டுள்ளது. இயக்குனர் கே.பாக்யராஜ் கொடுத்த பிரமாணம் இதில் முக்கிய உதவியாக இருந்துள்ளது.



