
டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை. அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் இன்று பரிதாப நிலையில் உள்ளனர்… என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை. அவரை நம்பி இறங்கியவர்கள் இன்று பரிதாப நிலையில் இருக்கிறார்கள் என்று கூறினார்.
மேலும், தமிழக அரசியலில் எடுபடாத ஒரு நபராக டிடிவி தினகரன் இருப்பதால் அவரைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று கூறிய அவர், சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரை தவிர்த்து யார் திரும்பி வந்தாலும் கழகத்தில் தாராளமாக இணைந்து கொள்ளலாம், மறப்போம் மன்னிப்போம் என்ற ரீதியில் சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றார்.
அனைத்து விதமான காய்ச்சலுக்கும் தேவையான மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பு உள்ளது என்றும் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்!



